மஹரகமயில் முஸ்லிம் வர்த்தகரின் கடை தீக்கிரை (photo)


மஹரகமயில் முஸ்லிம் வர்த்கருக்குச் சொந்தமான வர்த்தக நிலையம் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

இன்று அதிகாலை இச்சம்பவம் நடந்துள்ளதாக தெரியவருகின்றது.

இவ் விற்பனை நிலையத்தில் தோல் மற்றும் இரப்பர் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.

இவ் விற்பனை நிலையத்திலே அதிகாலை 04 மணியில் தீபரவியுள்ளது.

தீ அணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முடக்கிவிட்டுள்ளனர்.


Comments