மாயமான மியான்மர் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு! 116 பேரின் நிலை?


116 பேருடன் இன்று மதியம் மாயமான மியான்மர் இராணுவ விமானத்தின் பாகங்கள் கிடைத்துள்ளதாக அந்நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது.

மியான்மரில் 116 பேருடன் சென்ற இராணுவ விமானம் இன்று மதியம் திடீரென்று தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது.

மியான்மரின் மையக் நகருக்கும் யங்கூன் நகருக்கும் இடையில் 18,000 அடிக்கு மேல் பறந்து கொண்டிருந்த போது விமானம் காணாமல் போனாதாக கூறப்படுகிறது.

விமானத்தை தேடுவதற்கு நான்கு கடற்படைக் கப்பல்கள் மற்றும் இரண்டு விமானங்கள் அனுப்பப்பட்டிருந்தன.

இந்நிலையில் விமானத்தின் பாகங்கள் அந்தமான் கடற்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டவெய் நகரத்தின் மேற்கே சுமார் 20 மைல் தொலைவில் அந்தமான் கடற்பகுதியில் விமானத்தின் பாகங்கள் கிடைத்துள்ளதாம்.

எனவே விமானத்தில் பயணம் செய்த பயணிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது.

Comments