13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் செல்லும் அதிகாரப் பகிர்வுக்கு இடமில்லை: சுதந்திரக் கட்சி
மக்கள் கருத்துக் கணிப்பொன்றுக்கு செல்லாத வகையிலான அரசமைப்பு திருத்தங்களை மாத்திரம் நாடாளுமன்றத்திற்கும் கொண்டுவரப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியிடம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
இதேவேளை, 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அமைய அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும், 13 இற்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வை வழங்க இனங்க முடியாது எனவும் சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
அரசமைப்பு தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கடந்த வாரம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மேலும், கட்சிகளுக்கிடையே இனங்கக் கூடிய மற்றும் மக்கள் கருத்துக்கணிப்பொன்றுக்கும் செல்லாதவாறான திருத்தங்களை முதலில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, நிறைவேற்ற வேண்டும் எனவும் ஏனைய விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தலாம் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆலைப் பலாவாக்கலாமோ
ReplyDeleteஅருஞ் சுணங்கன் வாலை நிமிர்த்த வசமாமோ!
என்ற அடிகள் ஞாபகத்துக்கு வந்தன!