இனவாதம்: இதுவரை 14 பேரை கைது செய்து விட்டோம்: பொலிஸ்!


அண்மைக்காலமாக இலங்கையில் இனவாத நடவடிக்கைகள் அதிகரித்துள்ள நிலையில் ஸ்ரீலங்கா பொலிசார் நடவடிக்கை எடுக்கத் தவறி வருவதாக பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்கிய மற்றம் இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 14 பேரை இதுவரை தாம் கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

தகவலை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரியந்த ஜயகொடி, குறித்த பதினான்கு பேரில் இரு முஸ்லிம்கள், ஒரு தமிழர் மற்றும் ஒரு பௌத்த துறவியும் உள்ளடக்கம் என தெரிவித்துள்ளார்.

தந்துற சம்பவத்தில் தொடர்புபட்ட முஸ்லிம் இளைஞன் ஏற்கனவே சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களால் தாக்கப்பட்தாக பொய் நாடாகமாடிய பௌத்த துறவியொருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

எனினும், பகிரங்கமாக வெறுப்பூட்டல் மற்றும் இனவாதத்தில் ஈடுபட்டு வரும் ஞானசார, பிடியாணை பிறப்பிக்கப்பட்டும் ஸ்ரீலங்கா பொலிசாரின் நான்கு விசேட படையணிகளின் கண்களிலும் மண்ணைத்தூவி தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments