14 தமிழக மீனவர்கள் கைது


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 14 தமிழக மீனவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பு மற்றும் தலைமன்னார் கடற்பரப்பு பகுதிகளில் வைத்து நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவிலிருந்து 12 கடல் மைல் தொலைவில் வைத்து 8 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களிள் இரண்டு படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை, தலைமன்னாரிலிருந்து 15 கடல்மைல் தொலைவில் வைத்து, 6 தமிழக மீனவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் பயன்படுத்திய படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பகுதியில் கைது செய்யப்பட்டவர்கள், யாழ்ப்பாணம் மீன்பிடி உதவிப் பணிப்பாளரிடமும், தலைமன்னார் பகுதியில் கைது செய்யப்பட்டவர்கள் தலைமன்னார் மீன்பிடி உதவிப் பணிப்பாளரிடமும் கையளிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களின் படகுகளும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நேற்ற கைது செய்யப்பட்டவர்கள் அடங்கலாக, 59 தமிழக மீனவர்கள் இலங்கையின் தடுப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Comments