16 வருடங்களாக ஓமானில் சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்
16 வருடங்களாக ஓமானில் சிறைவைக்கப்பட்டிருந்த இலங்கைப் பெண்ணொருவர் விரைவில் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பாணந்துறை-மொரவிந்த பிரதேசத்தைச் சேர்ந்த குறித்தப் பெண் கடந்த 2001ஆம் ஆண்டு ஓமானுக்கு பணிப்பெண்ணாகச் சென்றுள்ளார்.
குறித்த பெண் பணிப்பெண்ணாக சென்ற நாள் தொடக்கம் இவரது உறவினர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவில்லை என்றும்,கடந்த 2015ஆம் ஆண்டு இவரது வீசா காலம் முடிவடைந்த நிலையில்,இந்தப் பெண் பணிபுரிந்த வீட்டின் உரிமையாளர்கள் இவரை இலங்கைக்கு அனுப்பவதற்காக ஓமான் தொழில் அமைச்சின் உதவியை நாடியிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழில் அமைச்சு மூலம் ஓமானிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து குறித்த பணிப்பெண் தூதுவராலயத்தின் பாதுகாப்பு முகாமிற்கு அழைத்து வரப்பட்டதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் தூதரக அதிகாரிகள் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்ததையடுத்து அவரது 30 இலட்சத்திற்கும் அதிகமான கொடுப்பனவை வழங்குவதற்கு அவர் பணிப்புரிந்த வீட்டு எஜமான் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 12 வருடங்களாக பாதுகாப்பு முகாமில் தங்கியிருந்த குறித்த பெண் மே மாதம் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


Comments
Post a Comment