பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்திய 18 சிறுவர்கள் மீட்பு!
சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதை தடுக்கும் பணியகத்தின் தலைமையகம் கடந்த மூன்று மாதங்களில் மேற்கொண்ட தேடுதல்களில் பிச்சை எடுப்பதில் ஈடுபடுத்தப்பட்டு வந்த 18 சிறுவர்களை மீட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
மீட்கப்பட்ட சிறார்களில் 11 சிறுவர்கள் எனவும் 7 பேர் சிறுமிகள் எனவும் பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.
இந்த பிள்ளைகளில் 4 பேர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் நீதிமன்ற பிணையில் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது


Comments
Post a Comment