இன்று (22) கந்தளாய் தி/பேராற்றுவெளி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய A.M.சரஸ்தீன் (SLPS 1) ஒய்வு பெறுகின்றார்.
மாஷா அல்லாஹ் அன்னார்டைய சேவையை பொருந்திக் கொண்டவனாக ஆமீன்.
இவர் தன்னுடைய கடந்த மூன்று வருடகாலமாக தனது உயர்ந்த சேவையினை வழங்கி இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சி ஏற்படுத்தினார்.
இப் பாடசாலையிலிருந்து வரலாறு காணாத அளவு இருந்து பல்கலைக்கழகம், செல்லும் அளவுக்கு கல்வியில் புதுமையான புரட்சியை ஏற்படுத்தியவர். தனது சேவைக்காலத்தில் கந்தளாய் பிரதேச பல பாடசாலையில் ஆசிரியராக மற்றும் அதிபராகவும் கந்தளாய் கல்வி வலய அதிகாரியாகவும் கடமை புரிந்தவர்.
தனது பிறந்த ஊருக்காக தன்னையே அர்ப்பணித்த சேவையாற்றியவர். சமூகத்திற்காக சேவை செய்வதில் முதல் நிற்பவர் . அல்லாஹ் மேலும் மேலும் நல்ல உதவியை செய்வானாக. இன்றைய தினம் இவரது 60 ஆவது பிறந்த நாளாகும் யா அல்லாஹ் இவருக்கு நல்ல அருள் புரிவனாக.
அதிபர் A.M சரஸ்தீன் அவர்களிடம் எதிர்காலத்தில் எமது பாடசாலை மற்றும் ஊருக்கு சேவை தொடர்ந்து செய்ய வேண்டும் இப்பாடசாலையின் சேவைக்காகவும் எமது சமூகத்தின் சேவைக்காவும் ஆற்றிய பங்களிப்புக்கு விரைவில் நாங்கள் கௌரவிப்பு நிகழ்வை செய்ய வேண்டும்
உங்களின் சேவைக்கு எங்கள் நன்றிகள்
(ஜஸாக்கமுல்லாஹ் ஹய்ரா ) பாடசாலையின் அபிவிருத்தி குழு, பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் மற்றும் பிரதேச நலன் விரும்பிகள்
தகவல்
OBA & Salman Farees
OBA & Salman Farees


Comments
Post a Comment