நான்கு மணி நேரத்தில் 3241 பேர் கைது


நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட திடீர் தேடல் நடவடிக்கையில் 3241 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசேட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 3214 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, போக்குவரத்துச் சட்டங்களை மீறிய 3647 பேருக்கு எதிராக வழக்குத் தொடர்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட நடவடிக்கைக்கு நாடு முழுவதிலும் 11558 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டதாகவும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது

Comments