சித்திரவதைக்குள்ளான 7 வயது சிறுவன்! இராணுவ வீரருக்கு விளக்கமறியல்


ஏழு வயது சிறுவனை சித்திரவதைக்குட்படுத்தியதாக கைது செய்யப்பட்ட விஷேட தேவையுடைய இராணுவ வீரர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதன்படி சந்தேகநபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அநுராதபுரம் - மிஹிந்தலை பிரதேசத்தில் ஏழு வயது சிறுவனை கொடூரமாக சித்திரவதைக்கு உள்ளாக்கி காயம் ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் விஷேட தேவையுடைய இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 16 ஆம் திகதி மிஹிந்தலை பொலிஸ் நிலையத்திற்குச் சென்ற சிறுவனின் தாய், தம்முடன் வசிக்கும் விஷேட தேவையுடைய இராணுவ வீரர், தனது மகனை கொடூரமாக தாக்குவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

அத்துடன், சித்திரவதைக்கு உள்ளான குறித்த சிறுவனை, பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். சிறுவன் தற்போது அநுராதபுரம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Comments