உயிருக்கு உத்தரவாதம் தந்தால் ‘ஞானசார’ வருவார்: BBS
உயிரச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள தமது பயங்கரவாத அமைப்பின் செயலாளர் ஞானசாரவின் உயிர்ப் பாதுகாப்புக்கு அரசாங்கம் உத்தரவாதம் தருமாக இருந்தால் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள நீதிமன்ற விசாரணைக்கு ஞானசார சமூகமளிப்பார் என தெரிவித்துள்ளது பொது பல சேனா.
தனது கைதைத் தவிர்க்க ஞானசாரவினால் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை நாளை மறுதினம் 22ம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையிலேயே பங்கரவாதி ஞானசாரவுக்கு உயிர் உத்தரவாதம் தரப்பட்டால் அவர் நீதிமன்றுக்கு சமூகமளிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஞானசாரவைப் பிடிக்க முடியாமல் ஸ்ரீலங்கா பொலிசாரின் நான்கு விசேட படையணிகள் இரண்டு வாரங்களுக்கு மேலாக தேடிக்கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment