பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனையில் பலர் கைது


எம்பிலிபிட்டிய பொலிஸார் நேற்று இரவு விசேட திடீர் சோதனையொன்றை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில் குடிபோதையில் வாகனம் செலுத்தியோர் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கையின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் நால்வர், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவர், குடிபோதையில் முறையற்ற விதத்தில் செயற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டள்ளனர்.

அத்துடன் சட்டவிரோத மதுபானம் உற்பத்தி செய்தமை தொடர்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அனைவரையும் இன்று எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments