(வீடியோ).,ஓட்டமாவடி மத்திய கல்லூரி மைதானத்தில் கல்குடா ஜமாஅத்தே இஸ்லாமி வெற்றிகரமாக நடாத்திய பெருநாள் தொழுகை..

Ihzana Fareed

இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் கல்குடா கிளையானது இன்று 26.06.2017 புனித நோன்பு பெருநாள் தொழுகையினை ஓட்டமாவடி மத்திய கல்லூரி மைதானத்தில் மிகவும் வெற்றிகரமாக நடாத்தி முடித்தனை அவதானிக்க கூடியதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் சென்ற வருடத்தினை விடவும் இவ்வருடம் ஜமாத்தினை சேர்ந்த அதிகளவிலான சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டமையும் முக்கிய விடயமாக பார்க்கப்பட்டது.

இன்று காலை சரியாக 6.15 மணிக்கு ஆரம்பமான தொழுகையினையும் அதனோடு சேர்ந்த கொத்பா உரையினையும் கிழக்கு பல்கலை கழகத்தின் சிரேஸ்ட்ட விரிவுரையாளரும், கல்குடா ஜமாஅத்தே இஸ்லாமியின் முக்கிய புள்ளியுமான ஜனாப் எ.ரி.எம்.றிஸ்வி(மஜீதி) நடாத்தியதுடன் சகோதர, சகோதரிகள் தங்களுக்கிடையில் பெருநாள் வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டனர். பெருநாள் தொழுகையின் காணொளி வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது



Comments