திருகோணாமலையில் அபகரிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள்

M.L.Faizer (LLB)
Attorney at Law

திருகோணாமலையில் அபகரிக்கப்பட்டுள்ள முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களை மீட்டெடுக்கும் சாத்வீகப் பயணத்திற்கு அனைவரும் அணிதிரள்வோம்.
இதோ உங்கள் பார்வைக்கு
1.தோப்பூர் நில அபகரிப்பு

a) நீனாக்கேனி-49 ஏக்கர் அபகரிப்பு(மாவட்ட செயலாளரின் உத்தரவின் பெயரில் அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு ?)
b) செல்வநகர் -1000 ஏக்கர் காணிப் பிரச்சினை(ஏறத்தாள 370 ஏக்கர் முஸ்லிம்களின் விவசாய பயிர்ச்செய்கை மற்றும் மேச்சல் நிலம்)

c) தோப்பூர் உல்லைக்களம்- 400 ஏக்கர் காணிப்பிரச்சினை(இதில் ஏறத்தாள 180 ஏக்கர் முஸ்லிம்களுக்கு சொந்தமான நிலம்)
d) தோப்பூர்-10 வீட்டு காணிப் பிரச்சினை
e) உப்பூறல் காணிப்பிரச்சினை(இதில் இனரீதியான ஆக்கிரமிப்பு,பாதுகாப்பு தரப்பு

2) மூதூர் நில அபகரிப்பும் காணிப்பிரச்சினையும்
a) 197 ஏக்கர் படுகாட்டு வயல்க்காணி பிரச்சனை (இதில் ஏறத்தாள 40 ஏக்கர் மூதூர் முஸ்லிம்களுக்குச் சொந்தமானது, இதில் 157 ஏக்கர் காணி தமிழ் சகோதரரக்கள் பலத்த போராட்டத்தின் பின் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களை விரட்டி பயிர்ச்செய்து வரும் நிலையில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிக்குள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த 2 அல்லது 3 விவசாயிகள் பலாத்காரத்தை பிரயோகித்து விவசாயம் செய்து வருகின்றனர்.இதில் பல பித்தலாட்டங்கள் வெளியில் சொல்ல முடியாது.

b) மூதூர் 15ம் வாய்க்கால்- 80 ஏக்கர் பொரஸ்ட் ஆக்கிரமிப்பு

c) மூதூர் மரைக்கார் வெட்டை-100 ஏக்கர் காணிப்பிரச்சினை.

d) மூதூர் அறபா நகர் குளத்தடிச்சேனை 60 ஏக்கர் அனுமதிப்பத்திரம் வழங்கப்படாத பூர்வீக முஸ்லிம்களின் காணிப்பிரச்சினை (தற்போது மீள்குடியேற்றப்பட்டு சந்தனை வெட்டை என்று வேறொரு கிராமத்தின் பெயர் வைக்கப்பட்டுள்ளது )

e) மூதூர் நெற்களஞ்ஞியசாலை 11 ஏக்கர் காணிப்பிரச்சினை இது நீண்டகாலமாக 1976 க்கு முன்பு இருந்து மூவின மக்களினதும் களஞ்ஞியசாலை.தற்போது பாதுகாப்பு நிலையம்.

f) இறால்குழி-நாவலடி சுனாமி மற்றும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு அரசகாணியை பகிர்ந்தளிப்பதில் அரச நிருவாகத்தினரின் மறைமுக நிகழ்சி நிரலில் அரங்கேரிவரும் எதிர்ப்பும் நிருவாகப் பாரபட்சமும்.

g) தக்வா நகர் பாதுகாப்பு படைகளுக்கான முகாமும் மக்களின் காணியும்.

h) மூதூர் ஜபல் நகர் சிலையும் அச்சுறுத்தலை எதிர்நோக்கவுள்ள முஸ்லிம் தமிழ் மக்களின் காணியும்.
தொடரும்….

Comments