கொழும்பில் தீ விபத்து என போலி தொலைபேசி அழைப்பால் குழப்பம்
தீ விபத்து தொடர்பில் போலி தகவல் வழங்கியமை குறித்து கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளது.
கொழும்பு 2 வேன்கந்த வீதியில் குறித்த தீ விபத்து இடம்பெற்றுள்ளாக தொலைபேசி அழைப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது..
அதற்கமைய உடனடியாக செயற்பட்ட தீயணைப்பு பிரிவு, தீயணைப்பு வாகனதை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. எனினும் அதுவொரு போலி அழைப்பு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய குறித்த சம்பவம் மற்றும் கிடைத்த தொலைபேசி இலக்கம் தொடர்பில் தகவல் பெற்றுக் கொள்வதற்காக இந்த முறைப்படு பதிவு செய்யப்பட்டுள்ளது.


Comments
Post a Comment