முஸ்லிம் மக்கள் சொத்துக்கள் மீது தாக்குதல் - ஒருவர் கைது
முஸ்லிம் மக்களின் சொத்துக்கள் மீது தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற தாக்குல்கள் தொடர்பில் ஒருவரை இலங்கை பொலிஸார் கைது செய்துள்ளனர்
இவர் பொதுபலசேனாவின் முக்கிய உறுப்பினராக கருதப்படும் 32 வயதை கொண்டவராவார்.
எனினும் எங்கே வைத்து கைது செய்யப்பட்டார் என்ற விடயம் வெளியாகவில்லை.
இந்தநிலையில் முஸ்லிம் மக்களின் சொத்துக்கள் மீது நடத்தப்பட்ட 16 தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸ் பேச்சாளர் பிரியந்த ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்
இவர் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது நடத்தப்பட்ட 4 தாக்குதல்களில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இந்த சம்பவங்கள் கடுமையான குற்றங்கள் என்ற வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment