திருகோணமலையில் மாவட்ட பெண்கள் வலையமைப்பினர் போராட்டம்
மூதூரில் மூன்று சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதை கண்டித்து திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு போராட்டமொன்றை மேற்கொண்டிருந்தது.
குறித்த போராட்டம் இன்று ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து கிழக்கு மாகாணசபையின் முன்னால் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,
பாடசாலைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் மற்றும் தொழில் ஸ்தாபனங்களிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகளை எதிர் கொள்ளும் போது அவற்றை தடுப்பதற்கான சூழலை உருவாக்குவதற்கான விழிப்புணர்வை வழங்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
அத்துடன், கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் பேரணியாக சென்று கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு சென்று ஜனாதிபதிக்கான மகஜரை கிழக்கு மாகாண ஆளுனருக்கு கையளித்தமை குறிப்பிடத்தக்கது.



Comments
Post a Comment