இங்கிலாந்தின் நியூகேஸ்டிலில் நோன்பு பெருநாள் தொழுகையின் போது திடீரென புகுந்த கார்: ஆறு பேர் படுகாயம்!
இங்கிலாந்தின் நியூகேஸ்டிலில் நோன்பு பெருநாள் தொழுகையின்போது கார் ஒன்று திடீரென கூட்டத்தில் புகுந்ததில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கிலாந்தின் நியூ கேஸ்டிலில் இன்று நோன்பு பெருநாள் கொண்டாடப் பட்டது. முஸ்லிம்கள் தொழுகைக்காக அங்குள்ள கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் கூடியிருந்தனர். அப்போது கூட்டத்தில் திடீரென ஒரு கார் புகுந்தது. இதில் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக 42 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாதத்திற்கும் இதற்கும் தொடர்பிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கடந்தவாரம் ஃபின்ஸ்புரி பார்க்கில் உள்ள மசூதி அருகே தொழுகை நடத்திவிட்டு வந்தவர்கள் மீது ட்ரக் ஒன்று வேண்டுமென்றே மோதியது குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment