இறக்காமம் முஹைதீன் மற்றும் ஜபல் கிராமத்தில் நடந்தது என்ன ?


இக்கட்டுரையாளர் Safeek Ahamed

தண்ணி கொடுப்பதாக தண்ணி காட்டிய முஸ்லிம் காங்கிரஸ்
இலங்கையில் எங்கும் நடக்காத ஒரு கேவலமான அரசியல் நிகழ்ச்சி நிரல்தான் அன்று நடந்தேறியது ஒரு நம்பிக்கை மோசடி பகல் கொள்ளை இடம்பெற்றது . அமிரலிபுரம் பள்ளிவாசலை நிர்மானித்த அஷ்ஷேக் ஹாலித் தாவூத் எனும் அறபி நிதாவுல் ஹைர் என்ற நிறுவணத்தின் பணிப்பார் ஊடாக முஸ்லிம்களுக்கென்று நன்கொடையாக வழங்கப்பட்ட நீர் விநியோகம் எமது நாட்டில் பல உதவிகளை செய்து வருகிண்றார் .

அந்த வகையில் அவரிடம் இலவச குடி நீர் இணைப்பு பெற்றுக் கொள்ளும் நோக்கில் முஹைதீன் புர மக்களுக்காக முஹைதீன்கிராம பள்ளி நபீலா றசாத் நிருவாகிகளால் கிழக்கில் அமைந்துள்ள நிதாவுல் ஹைர் மைப்பின் கிழை நிறுவனமான சனாபிலுல் ஹைர் என்ற அமைப்பின் தலைவரும் அம்பாரை மாவட்ட உலமா சபைத்தலைவருமான எஸ் , எச் ஆதம்பாவா மௌலவியிடம் ஒப்படைக்கப்பட்டு பல மாதங்களாகியும் கிடைக்காமல் இருந்தது. இது கடந்த கதை

அன்மையில் நீண்டகாலமாக கிடைக்காத இந்த இலவச நீர் இணைப்பை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அதன் பள்ளிவாசல் தலைவர் அதன் பெயர் பட்டியலை அமிரலி புர பள்ளித்தலைவர் சுல்பி மௌலவி ஊடாக பாலமுனை ஹாசிம் மௌலவி அவர்களின் நிறுவனத்தில் கொடுக்கப்பட்டு மீள் ஞாபகம் செய்து அங்கு முன் வேலையாக சில நீர் இணைப்புகளும் யாருக்கும் தெரியாமல் ஊருக்குப்படம் காட்டாமல் இடம்பெற்றது. இந்த திட்டத்தை முழு மக்களுக்குமாக கொடுக்குமாறு அம்பாரை மாவட்ட உலமா சபைத்தலைவர் எஸ் , எச் ஆதம்பாவா மௌலவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

இங்குதான் குழப்பம் இடம் பெற்றது அம்பாரை மாவட்ட உலமா சபைத்தலைவர் எஸ் , எச் ஆதம்பாவா அவர்கள் செய்த தவறு சுயநல நோக்கோடு அவரது உறவினர் முஸ்லிம் காங்கிரஸில் எதிர் காலத்தில் போட்டியிட உள்ள றஹ்மத் மன்சூரை மாகாணசபைத் தேர்தலில் களம் இறக்க திட்டமிட்டு அரசில் நாடகம் ஆடியுள்ளார் இவர் அல்லாஹுவை மறந்துவிட்டார்.
ஊரான் கோழியறத்து உம்மா பேரில் கத்தம் ஓதினார் இந்த அம்பாரை மாவட்ட உலமா சபைத்தலைவருமான எஸ் , எச் ஆதம்பாவா மௌலவி அல்லாஹ் இவரது செயற்பாட்டை பொருந்திக்கொள்வானாக..!!
சரி அதற்காக பெரிய மேடை கட்டி இறக்காமம் பள்ளிவாசல் அனைத்திலும் அறிவித்தல் கொடுக்கப்பட்டு பேன்ட் வாசித்து பெரும் விழா ஒண்றையும் நடாத்தியுள்ளார்கள் எது எப்படியோ அவர்கள் நோக்கம் பகலில் பேரு விழாவாக நடந்தேறியது

இந்த நிகழ்ச்சி நிரலை நிறைவு செய்ய அதற்கான முழுச்செலவுகளும் நீர் இணைப்பு பெற்ற ஏழைகளிடம் பல வந்தமாக அறவிடப்பட்டு நடாத்தப்பட்டது உன்மை இதை ஒப்புக்கொண்டவர்களும் என் வசம் இருக்கின்றார்கள் சந்தர்பம் வரும்போது அவர்களை இனங்காட்டுவேன்

கேவலம் ஒரு சில ஏழைகள் தனது நகையை ஈடு வைத்து கொடுத்துள்ளனர் இந்த பணத்தில் நோன்பு இப்தார் நிகழ்வும் இடம்பெற்றது இது சரியா பிழையா என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு இப்பணத்தை வெக்கமில்லாமல் அறவிட்டு தமது பெருமையை நிலைநாட்டியுள்ளது பாவத்தின் ஒரு பகுதி என்றே பேசலாம்
இதைப்பற்றி முஹைதீன் மற்றும் ஜபல் நகர மக்கள் அமிரலி புர பள்ளித்தலவைரிடம் முறையிட்டுள்ளனர் அதற்காக அவர் உரிய மௌலவியிடம் அதை கேட்டுள்ளார் அதற்காக அவரையும் விமர்சிக்கிறார்கள் இந்த சின்னத்தனமான அரசியல் சாக்கடைகள் உண்மை தகவலில் இதுவும் கிடைக்கபெற்ற ஒரு பகுதி

இவர்கள் சொல்லும் காரணம் நாங்கள் பணம் வாங்கியது எங்கள் ஊர் கௌரவத்தை பாதுகாக்கவாம் அதற்கு அந்த ஏழைகள் பணமா கிடைத்தது உங்கள் மத்திய குழுவில் பணம் இல்லையா? இருப்பதற்கான ஆதாராம் பாறூக் லோயர் பகிரங்கமாக சொல்றாரே வாப்பா
என்ன இது.....? வெக்கம் இல்லயா..? 
இன்னும் நீங்கள் இந்த பணத்தை திருப்பிக் கொடுக்கல்லயா....? மூன்று வேலை சோற்றை உணவாக உட்கொள்ளாமல் இடை நேர உணவாக பழவகையை உணவாக உட்கொள்ளுங்கள் காரணம் மண்டையில் ரத்த ஓட்டம் சிறப்பாக ஓடட்டும் முற்றத்தில் கொய்யா பழமாவது இல்லையா ?
இதை சரி காணூம் சில நக்குண்ட நாதாரிகள் அல்லாஹ்வை பயந்து கொள்ள வேண்டும்

இப்பணத்தை திருப்பிக் கொடுக்கும் வரை விடமாட்டோன் காரணம் இது வெளிப்படையான மோசடி பகல் கொள்ளை
தற்போது சில முஸ்லிம் காங்கிரஸ் போராளிகள் மக்களிடம் சென்று தாங்கள் இந்த பணம் விரும்பி கொடுத்ததாக சொல்லுங்கள் அப்பதான் டொயிலட் தெருவோம் என்று சொல்லுவதையும் சொல்லுகின்றார்கள் அப்பாவி ஏழை பொது மக்கள்

இவ்வாறான தவறுகள் இனிமேல் நடைபெறக்கூடாது இறக்காமம் மக்கள் அதிலும் குறிப்பாக ஒன்றுமே அறியாத அப்பாவி மக்களை என்பதை நன்கு அறிந்தவர்கள் ஆகையினாலே இப்படியான மோசடி மற்றும் ஏமாற்று வித்தைகளை கையாளுகின்றார்கள் என்பது ஒரே உரில் பிறந்தவன் என்ற அடிப்படையில் மன வேதனையை தருகின்றது
நல்ல மழை தருவதாய்ச் சொல்லி ஏமாற்றும் வானம்... நல்ல விலை தருவதாய்ச் சொல்லி ஏமாற்றும் அரசியல்வாதிகள்.இறக்காமம் மண்ணில் பல அரசியல்வாதிகள் குல்லா அணிந்து ஏழை மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் துரத்தப்பட வேண்டும்

இறக்காமம் மக்களை ஏமாற்றும் அரசியல்வாதிகள் எதிர்காலத்தில் ஓரங்கட்டப்படுவார்கள் இது காலத்தின் மீது சத்தியம்
தொடரும் - மோசடிகள் முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு இறக்காமம்
2014 ம் ஆண்டு மஹிந்த ராஜபக்க அட்சியில் இறக்காமம் பிரதேச ஏழை மக்கள் பல கோடு பணம் வாழ்வாதார கொடுப்பனவில் பல மோசடிகள் விரைவில்......மக்களை ஏமாற்றி பொழப்பு நடாத்தும் பிச்சைக்கார கூட்டம்







Comments