இளம் மனை­வியை எரித்து கொன்ற கண­வ­னுக்கு விளக்­க­ம­றியல் நீடிப்பு


(புத்­தளம் மேல­திக நிருபர்)

புத்­தளம் மது­ரங்­குளி, நள்­ளாந்­த­ளுவப் பிர­தே­சத்தில், தனது மனை­வியை எரித்­துக்­கொலை செய்­த­தாக சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்ட கண­வரை தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு புத்­தளம் மாவட்ட நீதி­மன்ற நீதிவான் நேற்று புதன்­கி­ழமை உத்­த­ர­விட்­டுள்ளார்.

மது­ரங்­குளி, நள்­ளாந்­த­ளுவப் பகு­தியைச் சேர்ந்த 19 வய­து­டைய முஹம்­மது தமீம் ஷாமிலா என்ற ஏழு மாதக் குழந்­தையின் தாய், கடந்த மே மாதம் 5ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை அவ­ரது கண­வ­ரினால் கை மற்றும் கால்கள் என்­ப­ன­வற்றை கட்­டி­வைத்து விட்டு மண்­ணெண்­ணையை ஊற்றி தீ வைத்து எரித்­த­துடன், தனது ஏழு மாதக் குழந்­தை­யுடன் அவ்­வி­டத்தை விட்டு தப்பிச் சென்­றுள்ளார்.

எனினும், தீயில் எரிந்­து­கொண்­டி­ருந்த குறித்த பெண்ணின் கூக்­குரல் கேட்டு, அவ்­வி­டத்­துக்குச் சென்ற அய­ல­வர்கள், கடு­மை­யான தீக்­கா­யங்­க­ளுக்கு உள்­ளா­கி­யி­ருந்த பெண்ணை மீட்டு, புத்­தளம் தள வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்­ளனர்.

குறித்த பெண், புத்­தளம் தள மற்றும் கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லை­களில் 15 நாட்­க­ளாக சிகிச்சை பெற்­று­வந்த நிலையில், மே மாதம் 20ஆம் திகதி சிகிச்சை பல­னின்றி உயி­ரி­ழந்தார்.

குடும்­பத்தில் இரு­வ­ருக்கும் ஏற்­பட்டு வந்த தக­ராறே இந்த சம்­ப­வத்­திற்கு முக்­கிய கார­ண­மாகும் என முதற்­கட்ட விசா­ர­ணையில் இருந்து தெரி­ய­வந்­துள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

இந்­நி­லையில், தனது மனை­வியை தீமூட்டி எரித்­த­தாகக் கூறப்­படும் கணவன், ஏழு மாதக் குழந்­தையை தனது தாயா­ரிடம் ஒப்­ப­டைத்து விட்டு பிர­தே­சத்தை விட்டு தலை­ம­றை­வா­கி­யி­ருந்தார்.

இவ்­வாறு தலை­ம­றை­வாகி இருந்த மர­ண­மான பெண்ணின் கணவர், முந்தல் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சமீ­ர­கம பிர­தே­சத்தில் உள்ள தனது தாயின் வீட்­டிற்கு வருகை தந்த போதே மது­ரங்­குளி பிர­தே­சத்தில் வைத்து 25 நாட்­களின் பின்னர் பொலி­ஸா­ரினால் கடந்த 31ஆம் திகதி கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

இவ்­வாறு கைது செய்­யப்­பட்ட சந்­தேக நபர் இம்­மாதம் முதலாம் திகதி புத்­தளம் மாவட்ட நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்ட போது அவரை 14ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

இவ்­வாறு தொடர்ந்தும் விளக்­க­மற்­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள நிலையில்  இது­தொ­டர்­பன வழக்கு விசா­ரணை நேற்றுமுன்தினம் புதன்­கி­ழமை மீண்டும் எடுத்­துக்­கொள்ளப்­பட்ட போது குறித்த இளம் தாய் கொலை செய்­யப்­பட்டு எரிக்­கப்­பட்­டாரா அல்­லது உயி­ருடன் கட்டி வைத்து எரிக்­கப்­பட்­டாரா என்­பது தொடர்பில் தெளி­வு­களை பெறு­வ­தற்­காக தீயினால் எரிந்­து­கொண்­டி­ருந்த சாமி­லாவை மீட்டு வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­த­வர்­க­ளி­ட­மி­ருந்து வாக்கு மூலம் பெற்­றுக்­கொள்ள வேண்டும் எனவும் அதற்­காக அவர்­களை அடுத்த மாதம் 6ஆம் திகதி மன்­றுக்கு அழைத்து வரு­மாறும் நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து, இது­தொ­டர்­பான வழக்கு விசா­ரணை அடுத்த மாதம் 6ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ள­துடன், சந்­தேக நபரை தொடர்ந்தும் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறும் நீதிவான் உத்­த­ர­விட்­டுள்ளார்.

இதே­வேளை, சந்­தேக நப­ரான ஷாமி­லாவின் கண­வரின் குடும்ப பரா­ம­ரிப்பில் உள்ள சாமி­லாவின் குழந்­தையை நீதி­மன்­றத்தின் ஊடாக மீட்டு சாமி­லாவின் விருப்­பத்­திற்­கி­ணங்க மூத்த சகோ­த­ரி­யிடம் ஒப்­ப­டைப்­ப­தற்கு தேவை­யான சட்ட நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு கொண்டு வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகியுள்ள சட்டத்தரணி நதீஹா அப்பாஸ் தெரிவித்தார்.

மரணமான ஷாமிலாவின் கணவரைக் கைதுசெய்து உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என, புத்தளம் நகரில் பல்வேறு சமூக அமைப்புகளினாலும், பெண்கள் அமைப்புக்களினாலும் பல கவனயீர்ப்பு போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments