பிறைபார்த்தல் தொடர்பான விழிப்புணர்வு :அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா..



பிறைபார்த்தல் தொடர்பான விழிப்புணர்வு :அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ,கொழும்பு பெரிய பள்ளிவாயல் ஆகியன இணைந்து கிண்ணியாவில்

பிறை பார்ப்பது தொடர்பான மாநாடு திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா புஹாரி பள்ளியில்( நத்வததுல் உலமா மத்ரஸா)எதிர்வரும் ஷவ்வால் மாத பிறை பார்த்தல் தொடர்பாக இன்று (08) ளுஹர் தொழுகையின் பின்பு நடைபெற்றது.

இதில் அகில இலங்கை கொழும்பு பிரதான காரியாலய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், கொழும்பு பெரிய பள்ளிவாயல் பிறைக் குழு உறுப்பினர்களால் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாயல்களையும் உள்ளடக்கிய நிர்வாகிகள் தலைவர்கள் பொது மக்கள் அனைவரையும் கொண்டதாக நிகழ்வுகள் இடம்பெற்றது.

மேலும் பிறைபார்ப்பதிலும் பிறை தென்படுவதிலும் திருகோணமலை மாவட்டம் முக்கியமான ஒரு மத்தியஸ்தானமாகவும் கணிக்கப்படுகிறது அதிலும் கிண்ணியாவிலே சிறந்ததாக பிறை தென்படக்கூடியதற்கான சான்றுகள் காணப்படுகின்றமையும் பிறைக் குழுவினால் இதன்போது விளக்கங்கள் வழங்கப்பட்டது .

இம்முறை புனித றமழான் நோன்புக்கான பிறையும் திருகோணமலை மாவட்டத்தின் நிலாவெளிப்பகுதியில் தென்பட்டமை மேலும் இதன்போது எடுத்துக் கூறப்பட்டது .பிறை பார்ப்பதன் முக்கியம் அயன் அவசியம் தொடர்பாகவும் பிறைக்குழுவினால் பல விளக்கங்களை குழுவினர் இதன்போது விளக்கமான உரைகளை வழங்கினர்.

இவ்விளக்கவுரைகள் தொடர்ந்தும் கிளிநொச்சி,மன்னார்,யாழ்ப்பாணம், புத்தளம் போன்ற மாவட்டங்களிலும் தொடர்ந்தும் இடம்பெறவுள்ளதாக மேலும் பிறைக்குழுவினரால் தெரிவிக்கப்பட்டது. 

இவ் விழிப்புணர்வு செயலமர்வில் திருகோணமலை மாவட்டங்களிலும் உள்ள பள்ளிவாயல்களின் பிறைக்குழு உறுப்பினர்கள் உலமா சபை தலைவர்கள் நிர்வாகிகள் என பலரும் பங்கேற்றனர்.

Comments