மத ஸ்தானங்களை பௌத்த குருமார் தாக்குதல் நடத்தியியதாக போலியான குற்றச்சாட்டை முன்வைத்த சட்டத்தரணி லக்ஸான் டயஸ் உடனடியாக மன்னிப்பு கேட்கணும்.
சட்டத்தரணி லக்ஸான் டயஸ்ஸினால் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் நாட்டு மக்களிடம் பகீரங்கமாக மன்னிப்பு கோரப்பட வேண்டும் என நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார்.
166 கிறிஸ்தவ மத ஸ்தானங்களை பௌத்த குருமார் தாக்குதல் நடத்தியிருப்பதாக ரி.வி. தெரண ஊடகத்தின் ´புதிய பாராளுமன்றம்´ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே அவர் இந்த கருத்தை வௌியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக தான் வணக்கத்திற்குரிய பேராயர் காடினல் மெல்கம் ரஞ்சித்திடம் விசாரித்ததாகவும், அவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் எவையும் இடம்பெறவில்லை என பேராயர் கூறியதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ குறிப்பிட்டார்.
இதன்படி போலியான குற்றச்சாட்டை முன்வைத்தமைக்காக குறித்த சட்டத்தரணி பொது மக்களிடம் பகீரங்க மன்னிப்பு கோர வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.


Comments
Post a Comment