ஞானசார சட்டவிரோதமாக நாட்டைவிட்டு தப்பியோட்டம்? பொலிஸ் சந்தேகம்!


நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேடப்பட்டுவரும் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நாட்டைவிட்டு சட்டபூர்வமாக வெளியேற வாய்ப்பிள்ளை என்று குறிப்பிட்ட பொலிஸ் பேச்சாளரான பிரியந்த ஜயக்கொடி சட்டவிரோதமாக ஞானசார தேரர் தப்பிச் சென்றிருக்கலாம் எனும் சந்தேகத்தையும் மறைமுகமாக நேற்றைய தினம் வெளியிட்டார்.

மேலும் அசம்பாவிதங்களை மேற்கொள்ளும் நபர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ஞானசார தேரர் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Comments