காரில் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம் - வத்தளையில் நடந்த சோகம்
வத்தளை -ஹெலகந்தை வழியாக மட்டக்குளி நோக்கி பயணித்த கார் ஒன்று நேற்று ஹெமில்டன் ஆற்றில் விழுந்ததில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
கார் நீரில் மூழ்கி இருந்த நிலையில், அதனை ஓட்டிச் சென்ற பெண்ணை பிரதேசவாசிகள் மீட்டு வத்தளையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அந்த பெண் உயிரிழந்துள்ளார்.
அளுத்மாவத்தை கொழும்பு 15 என்ற முகவரியை சேர்ந்த 52 வயதான நித்தியகலா என்ற பெண்ணே சம்பவத்தில் இறந்துள்ளார்.
பெண்ணின் சடலம் ராகமை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இன்று பிரேத பரிசோதனைகள் நடைபெறவுள்ளன.
வத்தளை பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


Comments
Post a Comment