அனைத்து பிரச்சினைகளையும் மஹிந்தவே தோற்றுவித்தார்
உமா ஓயா, சைட்டம் மருத்துவக் கல்லூரி, மீதொட்டமுல்ல குப்பை மேடு விவகாரம் உள்ளிட்ட வேலைநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் அனைத்து பிரச்சினைகளையும் மஹிந்த ராஜபக் ஷவே தோற்றுவித்தார். டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த தருணத் தில் வேலைநிறுத்தப் போராட்டங்களை செய்ய வேண்டாம். மக்கள் மீது அக்கறை காட்டுங்கள் என ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்தது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே பிரதி அமைச்சர் அஜித் பீ.பெரேராவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயபால ஹெட்டியாரச்சியும் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,
உமா ஓயா, சைட்டம் மருத்துவ கல்லூரி, மீதொட்டமுல்ல குப்பை மேடு விவகாரம் உள்ளிட்ட தற்போது வேலைநிறுத்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் அனைத்துப் பிரச்சினைகளையும் மஹிந்த ராஜபக் ஷவே தோற்றுவித்தார்.
எனினும் அந்த பிரச்சினைகள் அனைத் தும் தற்போது எம்மீது சுமத்தப்பட்டுள்ளன. இருந்த போதிலும் குறித்த அனைத்து சவால்களையும் நாம் முகங்கொடுத்து வெற்றி பெற்றோம். எனவே டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் இந்த தருணத்தில் வேலைநிறுத்தப் போராட்டங்களை செய்ய வேண்டாம். மக்கள் மீது அக்கறை காட்டுங்கள். பட்டம் பெற்றால் மாத்திரம் போதாது. மனிதாபிமானம் இருக்க வேண்டும். வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்த மாட்டார்கள் என்று நம்புகின்றோம்.
அண்மைக் காலமாக நாட்டில் தோன்றியுள்ள போராட்டங்களுக்கு முன்னாள் ஜனா திபதி மஹிந்த ராஜபக் ஷவே பொறுப்பு கூற வேண்டும். உமா ஓயா திட்டம் ஆரம்பிக்கப்படும் போது எந்தவொரு ஆய்வு அறிக்கையையும் பெற்றுக்கொள்ளாமல் மஹிந்த ராஜபக் ஷ உமா ஓயா திட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
இதுபோன்று மாலபே சைட்டம் மருத்து வக் கல்லூரிக்கு 600 மில்லியன் ரூபா கடன் கொடுத்து அந்த கல்லூரியை தனது பூரண அனுசரணையுடன் வழிநடத்திச் சென்றார். ஆகவே செய்வதெல்லாம் செய்துவிட்டு தற்போது எதுவுமே தெரியாதது போன்று நடிக்கின்றார் என்றனர்.


Comments
Post a Comment