உண்மை போராளி பஷீர் இல்லாத முஸ்லீம் காங்கிரஸ் தனது இருப்பிடத்தை தக்கவைத்துக்கொள்ளுமா?
Smh Haleem
ஒரு காலத்தில் கட்சியை இல்லாமல் ஆக்கத்துடித்தவர்கள் இன்று கட்சியில் கோலோச்ச துடிப்பது கட்சியை இல்லாமல் ஆக்கிவிடுமோ? என்ற எண்ணத்தை தோற்வித்துள்ளது.
பொங்குதமிழ், தேனகம், சோளகம்,போன்ற விடுதலை புலிகளின் வாழ்விடயங்களை கௌரவித்து கொண்டாடியவர்கள் கட்சியில் காலூன்றியி ருப்பது கட்சியின் எதிகாலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கின்றது.
அஸ்ரபின் பாசறையில் இருந்து அடி அடியாய் முன்னேறி, பின்னாட்களில் தவிசாளராய் தெரிவாகி, கால காலாமாய் அர்ப்பணிப்புடன் கட்சியை காப்பாற்றி வந்தவைரை பண பலத்தோடும், முகபலத்தோடும் எதிர்ப்பதானது கட்சியின் வீரியத்தை குறைத்தி்ருப்பதை காட்டுகின்றது.
தியாக கட்சியில் இணைவதற்கு இன்றைய அலிஸாகிர் M P என்ன தியாகங்களை செய்து இணைந்தார்? என்பதுவும் கட்சியின் சின்னத்தை பறித்து கட்சியை அழிக்க நினைத்தவர்தான் இன்று அதே கட்சியில் முதலமைச்சர் என்பதுவும் வரலாறு.
ஊரை ஒன்று திரட்டி அஸ்ரப் எனும் மாமனிதருக்கு கல்லால் எறிந்து இரக்கம் இன்றி துரத்தியவர்களும், பெருந்தலைவரினால் முனாபிக் என்று விலக்கி வைக்கப்பட்டவர்களும் அந்த தலைவர் உருவாக்கிய கட்சியின் கோஷத்தோடு வருவதை அவதானிக்கும் சாமானிய மக்கள் இனி கட்சியாவது, மசிராவது என்று பேசிக்கொள்ளும் அளவுக்கு வந்து விட்டது என்றால் கட்சி அழிந்து விட்டது என்றுதானே அர்த்தம்!
தலைவரை அழிக்க போராடியவர்கள் அவரது மறைவுக்குபின் அவர் இல்லை என்ற தைரியத்தில் கட்சியில் நுழைந்து அரசியல் பிழைப்பு நடத்தி கொண்டிருப்பவர்களை பஷீருடன் ஒப்பிடும்போது "சிங்கம்" இல்லாத காட்டில் நரிகள் தம்மை "சிங்கம்" என்று கூறி திரிவதைபோல நான் முஸ்லீம் காங்கிரஸ்காரன் என்று சொல்லும் நீங்கள் எங்கே? இதுவரை காலமும் அஸ்ரபின் சிந்தனைகளை சுமந்திருக்கும் பஷீர் எங்கே? கட்சிக்கு உண்மையாய் போராடிய உண்மை போராளி பஷீர் சேகுதாவூதை, விட அஸ்ரபின் சிந்தனைகளை உங்களால் அறிந்து கொள்ள முடியாது.
பஷீரை இழந்து நிற்கும் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி "நாவிழந்த" வாய்போல

Comments
Post a Comment