தம்பலகாமப் பிரதேசத்திற்கான தனியான ஒரு மாகாண சபை பிரதிநிதி கனவை நிறைவேற்றுவதா?? இல்லை திருகோணமலை மாவட்டத்தில் நமது சமூகத்தின் பிரதிநிதியை கைநழுவிட விடுவதா?? சிந்தித்து செயல்படுவோம்.
அரபா நகர் மஹ்ரூப் நிப்ராஸ்
இன்றைய காலகட்டத்தை நோக்கும் போது கிழக்கு மாகாண சபை கலைப்பு எப்போது என்ற கேள்வியோடவே எமது விடியல் விடிகின்றன காரணம் தம்பலகாமத்திற்கான ஓர் மாகாண சபை பிரதிநிதி அவசியமென பல விழிப்புணர்வுகளும் பிரச்சாரங்களும் நடைபெறுகின்றன.
ஓர் சில குறிப்பிட்ட வாக்குப் பலத்தை வைத்துக்கொண்டு தன் சுயநலத்துக்காக சிலரும் சமூகநலனுக்காக சிலரும் பல குழுக்களாகப் பிரிந்து சமூகவலைத்தளம் மட்டும் பிரதேச சமூகத்தின் மத்தியிலும் பிரச்சாரங்களும் விழிப்புணர்வுகளும் நாளுக்கு நாள் அரங்கேறுகின்றன.
இவ்வாறு தன் சுயநல தேவைகளுக்காக ஒரு சாராரும் சமூகத்தின் தேவையை கருத்திற்கொண்டு மட்டுமொரு சாராரும் போட்டி போட்டுக்கு கொண்டு வாக்குகளை சிறடிக்கும் போட்டியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தால் தம்பலகாமத்தின் கனவுதான் நிறைவேறுமா இல்லை நம் சமூகத்தின் பிரதிநிதியின் தொகைதான் கைநழுவி போய்விடுமா என்று நாம் அனைவரும் ஆழமாக சிந்தித்து நமது பிரதேசத்தின் தேவைப்பாட்டினையும் சமூகத்தின் இழப்பினையும் கருத்திற்கொண்டு தேவையற்ற விவாதங்களையும் போட்டிகளையும் தவிர்த்து நாம் அனைவரும் ஒற்றினைந்து ஒற்றுமையாக நமது பிரதேச தேவையை கருத்திற்க் கொண்டு ஒன்று சேருவோம் கட்சிகளை மறந்து நமக்காக நம்மில் இருந்து நமதூருக்காக ஓர் நாயகனை தெரிவுசெய்ய ஒன்றுபடுவேம்.
நமது போட்டி பொறமை விட்டுக்கொடுப்பின்மையால் நம் சமூகம் சார்ந்த பிரதிநிதியின் இழப்பிற்கு நாம் காரணியாகிவிடாமல் மிகக் கவனமாக செயற்படுவது அனைவரது கடமையாகும்.
சுயநலத்துடன் அரசியல் செய்பவர்களை ஓரங்கட்டி உண்மையான சமூகப்பற்று உடையவர்களையும் இறைவனுக்கு பயந்து மக்களின் பொறுப்புக்களை நிறைவேற்றுபவர்களையும் மக்கள் முன் அடையாளப்படுத்தி தம்பலகாமத்தின் அரசியல் எதிர்காலத்தை ஒளிர்மயமாக்குவோம்.

Comments
Post a Comment