ஞானசாரவை பிடிக்க உதவுங்கள் - பொலிஸ் மக்களிடம் கோரிக்கை
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தொடர்பில் தகவல் அறிந்தோர் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஞானசார தேரர் மறைந்திருக்க உதவோர் தராதரம் பார்க்காமல் கைது செய்யப்படுவதுடன், சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.குறித்த தேரருக்கு, மறைந்திருக்க உதவுவது மற்றும் பாதுகாப்பு வழங்குவது சட்டப்படி குற்றமாகும். தேரரைப் பிடிப்பதற்கு பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இன்னும் சில நாட்களுக்குள் அவரைக் கைது செய்ய செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.இதேவேளை அவர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் பொலிஸ் தலைமையகத்திற்கோ அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment