மக்களின் உயிர்களை மதிக்காத வைத்தியர்கள்! சிட்டிசன் திரைப்பட பாணியில் தண்டனை
நாடு தழுவிய ரீதியில் அரச வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
சைட்டம் எனும் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினையை அடிப்படையாக கொண்டு பணி பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.
இலங்கையில் டெங்கு நோயின் தாக்கம் தீவிரம் பெற்றுள்ள நிலையில் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மக்களின் உயிர்களை கூட கவனத்தில் கொள்ளாத வைத்தியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் பலர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.
அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் பலர் வைத்தியர்களின் செயற்பாட்டினை கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்த நிலையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு வித்தியாசமான முறையில் எதிர்ப்பு வெளியிடும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மனிதாபிமானமற்ற முறையில் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபடும் வைத்தியர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யாதிருக்க கடை உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பில் எழுதப்பட்ட வாசகங்கள் பல்வேறு கடைகளில் ஒட்டப்பட்டுள்ளமையை புகைப்படங்கள் ஊடாக காண முடிகிறது.


Comments
Post a Comment