அசாத் சாலியின் பேச்சு: காணொளியை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதவான் உத்தரவு
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் திகதி தனது வீட்டில் நடத்திய ஊடக சந்திப்பில் சிங்கள பௌத்த மக்கள் மத்தியில் விரோத உணர்வை துண்டும் வகையில் பேசியதாக கூறப்படும் பேச்சு அடங்கிய காணொளியை பொலிஸாருக்கு வழங்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸ் பிரிவிடம் இந்த காணொளியை வழங்குமாறு கொழும்பு பிரதான நீதவான், மூன்று தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
முதுன்கொடை பிரதேசத்தை சேர்ந்த டப்ளியூ.ஏ. சாலிய ரணவக்க என்பவர் செய்த முறைப்பாடு குறித்து விசாரணை நடத்த காணொளி தேவை என பொலிஸார் விடுத்த கோரிக்கை ஆராய்ந்த நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.


Comments
Post a Comment