புடவைக்கு பதிலாக ஜீன்ஸ் கேட்கும் பெண் வழக்கறிஞர்கள்!


இலங்கை நீதிமன்றங்களில் கடமையில் ஈடுபடும் போது அணியும் புடவைக்கு பதிலாக ஜீன்ஸ் அணிய அனுமதி வழங்குமாறு பெண் வழக்கறிஞர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுவாக நீதிமன்றத்திற்கு செல்லும் போது உரிய முறையில் ஆடை அணிந்து செல்வது கட்டாயமாகும்.

எனினும் அதிக வேலைப்பழுவுடனான வழக்கறிஞர்களுக்கு நீதிமன்ற வளாகத்தில் விரைவாக ஓடியாடி வேலை செய்ய ஜீன்ஸ் அணிவது அவசியம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விசேடமாக இலங்கையின் முப்படையில் சேவை செய்யும் பெண்கள் மற்றும் பொலிஸார் புடவை அணிவதில்லை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடமையை பாதிக்கும் என்பதனாலே அவர்கள் புடவை அணிவதில்லை என வழக்கறிஞர்கள் குறிப்பிட்டுளளதாக தெரியவந்துள்ளது

Comments