காவி அணிந்து இனவாதத்தை தூண்டுவோர் பிக்குகள் அல்ல - சந்திரிக்கா


காவியை போர்த்திக் கொண்டு இனவாதத்தை தூண்டும் நபர்களை பௌத்த பிக்குகள் என்று கூற முடியாது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

காலியில் மாபலகம பிரதேசத்தில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஒருவர் காவியை அணிந்து கொண்டால், புத்த பகவானின் தர்மத்தை கடைப்பிடித்து அந்த தர்மத்தை மக்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

நான் ஜனாதிபதியாக இருந்த போது ஜனாதிபதி மாளிகையில் தமிழ் வகுப்புக்கு ஏற்பாடு செய்திருந்தாகவும் அதின் மூலம் பல அமைச்சர்கள் தமிழ் கற்றுக்கொண்டனர் எனவும் பின்னர் அந்த வகுப்பு நடத்தப்படவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Comments