ரவியை விடாது துரத்தும் பந்துல ; மேலும் ஒரு வழக்கு!
நிதியமைச்சராக ரவி கருணாநாயக்க பதவியேற்றதிலிருந்து பல்வேறு வகையில் அவருக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்து வரும் பந்துல குணவர்தன, தற்போது வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள ரவியின் பொறுப்பில் தேசிய லொத்தர் சபை கொண்டு வரப்படுவதை எதிர்த்து வழக்குப் பதிவு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சரே லொத்தர் சபையை நெறிப்படுத்தும் அதிகாரமுள்ளவர் எனவும் வெளியுறவுத்துறை அமைச்சரின் கீழ் அவ்வாறான ஒரு நிறுவனத்தைக் கொண்டு வர முடியாது எனவும் பந்துல மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment