பௌத்த சர்வாதிகாரி ஒருவரே நாட்டின் ஜனாதிபதியாக வேண்டும்..!
இந்த நாட்டுக்கு பௌத்த சர்வாதிகாரி ஒருவரே ஜனாதிபதியாக வரவேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஞாயிறு சிங்கள வார நாழிதல் ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
2020 இல் எப்படியான ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு பதில் அளித்துள்ள அவர்..
பௌத்த சர்வாதிகாதி ஒருவர் ஜனாதிபதியாக வரவேண்டும் என பதில் அளித்திள்ளார்.
2020 இல் கோத்தாபய ராஜபக்ஷ தேர்தலில் போட்டியிட்டால் ஆதரவளிப்பீர்களா என அவரிடம் வினவப்பட்ட போது தனிநபர் தொடர்பில் நாம் கணக்கில் எடுப்பதில்லை கொள்கையே எமக்கு முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment