(வீடியோ).பிரதி அமைச்சர் அமீர் அலியின் நீண்ட ஆயுலுக்காக புனித ரமழானில் மக்களை பிரார்த்திக்குமாறு வேண்டும் ஹச்சி போஸ்.

Ihzana Fareed

சமகாலத்தில் கல்குடா பிரதேசத்தின் அரசியல் நிலவரமானது முக்கியமான பேசும் பொருளாகவும் தூர நோக்கோடும் சிந்திக்கப்பட வேண்டிய விடயமாக இருந்து கொண்டிருக்கின்றது. எதிர் வருகின்ற அரசியல் தளங்களில் மகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை எதிர் நோக்கியுள்ள நிலையில் நாட்டில் வாழும் முஸ்லிம்களினுடைய பாதுகாப்பு மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு கொடுக்கப்படுகின்ற செல்வாக்கினை பார்க்கின்ற பொழுது மிக பரிதாபகரமான நிலமைக்கும், பயங்கரமான அச்சுருத்தல்களுக்கும் தள்ளப்பட்டுள்ள நிலவரமாகவெ காணப்படுகின்றது.

இந்த நிலையிலே கல்குடாவின் அரசியல் தலைமையாக தொடர்ந் தேர்ச்சியாக பதினைந்து வருடங்களுக்கு மேல் இருந்து வரும் பிரதி அமைச்சர் அல்-ஹாஜ் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் கரங்களை கல்குடா மக்கள் எல்லோரும் சேர்ந்து ஒருமித்த குரலில் பலப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாய கடமையாகும். அந்த வகையிலே பிரதி அமைச்சருடைய ஆரோக்கியத்திற்காவும், மன வலிமைக்காகவும், நீண்ட ஆயுள் வேண்டியும், அதே போன்று எல்லா வகையான சூழ்ச்சிகள், ஆபத்துக்களில் இருந்தும் அவரை எல்லாம் வல்ல அல்லாஹ் காப்பாற்றி அருள் புரிய வேண்டும் என இப்புனித ரமழான் மாதத்தில் இரண்டு நிமிடங்களாவது எஞ்சியிருக்கின்ற நாட்களில் ஐவேளை தொழுகையில் கல்குடா வாழ் மக்கள் அனைவரும் அல்லாஹ்விடத்தில் கையேந்தி பிரார்த்திக்குமாறு முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் ஹச்சி போஸ் வேண்டி நிற்கின்றார். 

மேலும் தனது கருத்தினை தெரிவித்த ஹச்சி போஸ்… நாடு பல அரசியல் தளம்பல்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையிலும் ,முஸ்லிம்கள் மீதான இனவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள அசமந்த போக்குகள் ஒரு பக்கம் இருக்க மறு பக்கத்திலே நாம் எதிர் நோக்கவுள்ள மாகாண சபை மற்றும் பிரதேச சபை தேர்தல்களில் வெளியூர் அரசியல்வாதிகளின் தலையீடுகளும், கல்குடா முஸ்லிம்களின் அரசியல் இஸ்தீர தனமைகளை குளப்ப வேண்டும், பிரதி நிதித்துவம் கல்குடாவிற்கு கிடைப்பதனை தடுத்து நிறுத்த வேண்டும், என்ற குறுகிய மனப்பான்மையுடன் வழமையான அவர்களுடைய அரசியல் நாடகங்களை அரங்கேற்றும் திட்டங்களுடன் நிச்சயமாக கல்குடாவிற்குள் உட்புகுவார்கள்.

கல்குடாவிற்கான பிரதி நிதித்துவத்தினை பெற்றுகொள்வதற்காக 2000, மற்றும் 2001ம் ஆண்டுகளில் மர்ஹும் மொகைதீன் அப்துர் காதருக்காகவும் 2004ம் ஆண்டு தற்போதைய கல்குடாவின் அரசியல் தலைமை பிரதி அமைச்சர் அமீர் அலிக்காவும் வேலிகட்டிய அரசியலினை மேற்கொண்டு அதில் வெற்றி கண்ட எமது கல்குடா மக்களின் அரசியல் தலைவனாக சுமார் 15 வருடங்கள் வெளியூர் அரசியல்வாதிகளினால் அசைக்க முடியாத அரசியல் தலைமையாக இருந்து வரும் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் அரசியல் அதிகாரங்களும், செல்வாக்கும் தொடர்ந் தேர்ச்சியாக  அவருடைய கரங்களில் இருப்பதற்காகவே நான் துவா பிரார்த்தனையில் ஈடுபடுமாறு மக்களை வேண்டி நிற்கின்றேன்.

காலாகாலமாக கல்குடா மக்களை அரசியல் அநாதையாக்க வேண்டும் என துடித்துக்கொண்டிருக்கு சுய நல அரசியல்வாதிகளுக்கு மத்தியில் எமக்கு கிடைத்திருக்கும் அரசியல் தலைமையான பிரதி அமைச்சர் அமீர் அலியின் கரங்களை மேலும் பலப்படுத்தி கல்குடா மண்ணுக்கு பாதுகாப்பினையும், அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கும் நீண்ட ஆயுலினையும், தேக சுகத்தினையும் வழங்க வேண்டும் என புனித ரமழான் மாததில் ஐவேளை தொழுகையிலும் தாய்மார்கள், சகோதரிகள், இளைஞர்கள் என அனைவரும் துவா பிரார்த்தனையில் ஈடுபடுமாறு வேண்டி நிற்கின்றார் ஹச்சி போஸ். ஹச்சி போசின் வேண்டுதல்கள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யபட்டுள்ளது.

Comments