டான் மற்றும் ஞானசாரவின் சகாக்களுக்கு பொலிஸ் ‘அழைப்பாணை’!


சிறைவாசம் அனுபவித்து பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் உணர்ந்து விட்டதாக நாடகமாடி அமைதியாக இருந்து, பின் ஞானசாரவுடன் இணைந்து அண்மைக்காலமக இனவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் டான் பிரசாத்துக்கு தெமட்டகொட பொலிஸ் குற்றத்தடுப்புப் பிரிவிலிருந்து அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஞானசாரவின் மேலும் சில சகாக்களுக்கும் இவ்வாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக செய்திப்பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது.

தற்சமயம் இனவாத குழுக்கள் தமக்கிடையில் சண்டையிட்டுக் கொள்கின்ற நிலையில் இவ்வழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளதோடு ஞானசாரவுக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஸ்ரீலங்கா பொலிசாரின் கண்களில் மண்ணைத் தூவி ஞானசார தொடர்ந்தும் தலைமறைவாக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments