நோன்பு மிகச் சிறந்த இயற்கை மருத்துவம்


உள்­ளத்­திற்கும் உட­லுக்கும் ஆரோக்­கி­யத்தை அள்ளி வழங்கும் ஓர் அற்­புத மாதம். அல்­ஹம்­து­லில்லாஹ். எனவே இப்­பு­னித ரமழான் மாதத்தில் நோன்பு நோற்­ப­தற்கு சக்­தி­யுள்ள அனைத்து முஸ்­லிம்­களும் நோன்பு நோற்று அம்­மா­தத்­தினை சிறப்­பிக்க வேண்­டி­யது கட்­டாயக் கட­மை­யாகும். உட­லுக்கும் உள்­ளத்­திற்கும் வசந்­த­காலம் நோன்பு மாத­மாகும்.

இஸ்­லா­மிய மார்க்கம் நமது நாயகம் முஹம்மத் முஸ்­தபா ஸல்­லல்­லாஹு அலைஹி வ­சல்லம் அவர்­களின் பிறப்பின் பின்னர் தோன்­றி­ய­தொரு நவீன மத­மல்ல. அது உலகம் படைக்­கப்­பட்ட நாளி­லி­ருந்து அதனைப் படைத்­த­வனால் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­ட­தொரு மார்க்கம் என்­ப­தற்கு நோன்­பையும் ஓர் உதா­ர­ண­மாகக் கூறலாம்.

காரணம் அனைத்து மத கோட்­பா­டு­க­ளிலும் நோன்பு பற்­றிய அறி­வுரை சொல்­லப்­பட்­டி­ருக்­கி­றது. இத­னையே அல்லாஹ் தனது திரு­ம­றையில், ''விசு­வா­சி­களே! உங்­க­ளுக்கு முன் இருந்­த­வர்கள் மீது நோன்பு விதி­யாக்­கப்­பட்­டி­ருந்­தது போல் உங்கள் மீதும் விதி­யாக்­கப்­பட்­டுள்­ளது. அதன் மூலம் நீங்கள் உள்­ளச்­ச­மு­டையோர் ஆகலாம்'' என அல்லாஹ் கூறு­கின்றான். (2:183)

எனவே நோன்பு சமீ­ப­கா­ல­மாக தோன்­றி­யது அல்ல. அது அல்­லாஹ்வால் பிர­பஞ்சம் படைக்­கப்­பட்ட நாளி­லி­ருந்து தொன்­று­தொட்டு வரக்­கூ­டிய மனி­தர்­க­ளினால் அனுஷ்­டிக்­கப்­பட்டு வரு­கின்­ற­தொரு கிரி­யை­யாக இருந்­துள்­ளது. உல­கி­லுள்ள சகல மதத்­தி­னர்­களும் ஏதா­வ­தொரு அமைப்பில் காலா­கா­ல­மாக நோன்பு நோற்று வரு­வது இங்கு குறிப்­பி­டத்­தக்­க­தொரு விட­ய­மாகும்.

நோன்பு நோற்கும் ஒருவர், சுபஹ் தொழு­கைக்­கான அதா­னொலி கேட்கும் வரை உண்டு, பரு­கலாம். அதா­னொலி கேட்­டு­விட்டால் உண்­பதைக் கட்­டாயம் நிறுத்திக் கொள்ள வேண்டும். பேணு­த­லுக்­காக ஸஹர் முடிவு நேரத்­துடன் உண்டு, பரு­கு­வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நீங்கள் ஸஹர் செய்து கொள்­ளுங்கள். அதில் பரகத் இருக்­கி­ற­தெனக் கூறிடும் அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ஸஹரை முடி­யு­மா­ன­வரை பிற்­ப­டுத்திக் கொள்­ளு­மாறு அறி­வுரை பகர்ந்­துள்­ளார்கள். யூதர்கள் தங்­க­ளது ஸஹர் உணவை நேர­கா­லத்­தோடு முடித்­துக்­கொள்ளும் பழக்­க­மு­டை­ய­வர்­க­ளாக இருந்­துள்­ளதே இதற்­கான கார­ண­மாகும்.

அவ்­வாறே நோன்பு திறப்­ப­தற்­கான நேரத்தை அடைந்து விட்டால் உடனே நோன்பைத் திறந்து விட வேண்டும். யூதர்­கள்தான் நோன்பு திறப்­பதை தாம­திப்­பார்கள் என்று நபி மொழி கூறிக் கொண்­டி­ருக்­கி­றது. சூரியன் முழு­மை­யாக மறைந்து இரவின் இருள் படர ஆரம்­ப­மா­வ­துதான் நோன்பு திறக்கும் நேர­மாகும்.

  ஸஹர் உணவு...:  
ஸஹர் நேரத்தில் உணவு உட்­கொள்­வது ஸுன்­னத்­தான அம­லாகும். காலை மதியம், இரவு என வழக்­க­மாக சாப்­பிட்டுப் பழ­கிப்­போன நமது வயிறு, மண்­ணீரல், கல்­லீரல், சிறு­குடல், பெருங்­குடல் போன்­றவை ஒரு மாத காலம் நேரம் மாறி ஸஹர் நேரத்தில் நாம் சாப்­பி­டு­வதன் மூலம் இந்த உறுப்­புக்­களின் வழக்­க­மான இயற்கை முறையில் ஓய்வு கிடைத்து புத்­து­ணர்ச்சி பெற்று இயங்க ஆரம்­பிக்­கி­றது. இதன் மூலம் இந்த உறுப்­புக்கள் சம்­பந்­தப்­பட்ட நோய்கள் நல­மா­கின்­றன.

குறிப்­பாக நுரை­யீரல் அதி­கப்­ப­டி­யாக இயங்கும் நேரம் காலை 3 --– 5 வரை உள்ள 2 மணி நேரங்­க­ளாகும். ஸஹர் நேரத்தில் நோன்பு நோற்­ப­தற்­காக விழித்­தி­ருப்­பதால் நமது நுரை­யீரல் மிகுந்த புத்­து­ணர்வு பெற்று சிறப்­பாக செயல்­ப­டு­வ­தாக மருத்­துவ அறிக்­கைகள் கூறு­கின்­றன. இது ஸஹர் நேரத்தில் உணவு உட்­கொள்­வ­தனால் நோன்­பா­ளியின் தேகம் பெற்­றுக்­கொள்­கின்ற பல­னாகும்.

மேலும் இரவின் விரும்­பிய நேரத்தில் அடுத்த நாள் நோன்பு நோற்­ப­தற்­கான நிய்­யத்­தினை அவ­சியம் வைத்­துக்­கொள்ள வேண்டும். ஸஹர் உணவு உண்ட பின்­னர்தான் நிய்யத் வைக்க வேண்டும் என்­ப­தல்ல.

  இஃப்தார் :  
நோன்பு திறப்­ப­தற்­கான நேரம் வந்­ததும் நோற்­றி­ருந்த நோன்பு செய­லற்­றுப்­போய்­விடும்.

ஆகாரம் இதற்குப் பிர­தானம் அல்ல. எனினும் உங்­களில் ஒருவர் நோன்பு திறக்கும் பொழுது பேரீத்தம் பழத்தால் நோன்பு திறக்­கட்டும்.

அதில் பரகத் இருக்­கி­றது. அது கிடைக்­கா­விட்டால் தண்­ணீரால் நோன்பு திறக்­கட்டும். ஏனெனில் அது தூய்­மை­யா­ன­தாகும் என்ற அண்­ணலார் ஸல்­லல்­லாஹு அலைஹி வஆ­லிஹி வசல்லம் அவர்­களின் பொன் மொழி திர்­மிதி, இப்னு மாஜாவில் பதி­வா­கி­யுள்­ளது.

நோன்­பாளி தனது நோன்பைத் திறக்கும் போது கேட்­கப்­படும் பிரார்த்­தனை நிரா­க­ரிக்­கப்­ப­டு­வ­தில்லை என அண்­ணலெம் பெரு­மானார் முஸ்­தபா ஸல்­லல்­லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் நவின்­றுள்­ளார்கள். (திர்­மிதி) எனவே இந்­நே­ரத்தை நாம் வீண­டித்­து­வி­டக்­கூ­டாது.

  பேரீத்தம் பழத்தின் மகிமை..  
நோன்­பா­ளியின் உடலில் பகல் பொழு­து­களில் ஏற்­ப­டு­கின்ற சோர்வு, களைப்பு சாப்­பாடு குறைந்­த­தனால் ஏற்­பட்­ட­தல்ல. சரா­ச­ரி­யாக ஒரு­வ­ரது உடலில் இருக்க வேண்­டிய சர்க்­கரை குறை­வ­துதான்.

அதற்­கான கார­ண­மாகும். உடலில் குறைந்­து­விட்ட சர்க்­க­ரையை மீண்டும் உட­லுக்கு மிக வேக­மாக வழங்கி உடலில் சுறு­சு­றுப்பை ஏற்­ப­டுத்தும் அபார சக்தி பேரீத்தம் பழத்­துக்கு இருப்­ப­தாக நவீன ஆய்­வா­ளர்கள் கூறி­யி­ருக்­கின்­றார்கள்.

எனவே, நோன்­பினை பேரீத்தம் பழத்­தி­னையும் தண்­ணீ­ரையும் கொண்டு திற­வுங்கள். பின்னர் மஃரிப் தொழு­கையை நிறை­வேற்­றி­விட்டு போது­மா­ன­ளவு உண்டு, பருகிக் கொள்­ளுங்கள்.

அதி­கா­லை­யி­லி­ருந்து மாலை வரை பொறு­மை­யாக இருந்து ஐம்­பு­லன்­க­ளையும் அடக்கி வைத்­த­வர்கள் நோன்பு திறக்கும் போது பொறு­மை­யி­ழந்து கட்­டுப்­பாடு இல்­லாமல் கண்ட கண்ட உண­வு­களை உண்­பது நோன்பின் நோக்­கத்தைப் பாழாக்­கி­விடும்.

நோன்பு திறக்கும் நேரத்தில் பல அமி­லங்கள் வயிற்றில் சுரந்­தி­ருக்கும். குட­லிலும் வயிற்­றிலும் இன்னும் தேவை­யற்ற கழி­வு­களும் தங்­கி­யி­ருக்கும் இவை­களை நீக்கிச் சுத்­தப்­ப­டுத்தும் சக்தி பேரீத்தம் பழத்­திற்கு அல்லாஹ் வழங்­கி­யுள்ளான்.

ஐஸ் கிரீம், குளிர்­பா­னங்கள், சோடா, கோலா போன்ற வாயு நிறைந்த பானங்கள், செயற்கைப் பானங்கள், எண்­ணெய்யில் மூழ்கி எடுக்­கப்­பட்ட உணவுப் பண்­டங்­களின் மூல­மாக நோன்பு திறப்­பதைத் தவிர்க்க வேண்டும்.

இது உடல் நலத்தை பாதித்­து­விடும்.

இவ்­வாறு முறை­யாக நோன்பு திறந்த பின்னர் ஒரு மணி நேரத்­திற்கு உணவு உண்­ணாமல் இருப்­பது உடல் நலத்­திற்கு மிகவும் சிறந்­தது. பேரீத்தம் பழத்தின் வித்தை பொடி செய்து கோபி, பால், சர்­கரை கலந்து சாப்­பிட்டால் உட­லுக்கு உர­ம­ளிக்கும் என்றும் ஆய்­வுகள் கூறு­கின்­றன.

பேரீத்தம் பழத்­தினை உட்­கொண்டு நோன்பு திறக்­கு­மாறு அண்­ணலெம் பெரு­மானார் ஸல்­லல்­லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறிய அற்­புத வாக்கின் யதார்த்தம் என்ன என்­பதை அறிஞர் பெரு­மக்­க­ளான ஹஜர் அல் அஸ்­க­லானீ, இப்னுல் கையிம், புஜை­ரிமி, தஹாவீ, இப்னுல் அரபி போன்ற பெரு­மக்கள், சுமார் 700 வரு­டங்­க­ளுக்கு முன்­னரே தெளி­வு­ப­டுத்­தி­விட்­டார்கள்.

அண்­ணலார் ஸல்­லல்­லாஹு அலைஹி வசல்லம் அவர்­களின் வார்த்­தைகள் வெறும் சாதா­ரண வார்த்­தைகள் அல்ல. அது தெய்­வீக வார்த்­தை­கள்தான் என்­பதை நவீன ஆய்­வா­ளர்கள் இப்­பொ­ழு­துதான் கண்டு பிடித்­தி­ருக்­கி­றார்கள்.

அமெ­ரிக்க நோய்த் தடுப்பு இயக்­கு­ந­ரான மருத்­துவர் எல்ஸன் எம். ஹாஸ் என்­பவர் நோன்பு பற்றி பின்­வ­ரு­மாறு விளக்­கு­கிறார். நோன்பு மிகச் சிறந்த இயற்கை மருத்­துவம். அது மிகத் தொன்­மை­யான உல­க­ளா­விய நோய் நிவா­ரணி.

15 வரு­டங்­க­ளுக்கு முன்பு நான் நோயுற்ற பொழுது உணவைத் தவிர்த்­தி­ருந்­ததே என் உடல் நலம் தேற உத­வி­யது எனக் கண்­டு­பி­டித்தேன்.

புதிய சக்தி உடலில் பாய்­வதை உணர்ந்தேன். உட­லி­யக்­கத்தில் உட்­சாகம் பளிச்­சி­டு­வதை உணர்ந்து கொண்டேன். எனவே நோன்பு நலம் தரும் பல நோய்­களைத் தடுக்­கி­றது என்று குறிப்­பிட்­ட­துடன், அமெ­ரிக்­கர்­களின் பெரும்­பா­லான நோய்­க­ளுக்கு காரணம் உணவுக் கட்­டுப்­பாடு இல்லாததேயாகும்.

நோன்பு என்றால் என்னவென்பது அவர்களுக்குத் தெரியாதிருக்கிறது. உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை நோய் முதலிய வியாதிகள் தோன்றுவதற்கு உணவுக் கட்டுப்பாடின்மையே காரணமாகும்.

நோன்பு இவற்றைத் தடுக்கும் கருவியாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

நோயுற்றவரிடமிருந்து உணவை நீக்கி விடுங்கள். இப்பொழுது பட்டினி கிடப்பது நோயுற்றவர் அல்ல. அவருடைய நோயே என மற்றுமொரு அமெரிக்க வைத்தியர் டியூவே என்பவர் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு மனித உடலுக்கு அழகான ஆரோக்கியத்தினை அள்ளி வழங்கும் சிறப்பான நோன்பினை நோற்று, உள ஆரோக்கியத்தினைப் பெற்றிடவும் முயற்சிக்க வல்ல அல்லாஹ் அனைவருக்கும் தெளபீக் செய்வானாக! 

Comments