இரு முறை சிக்கியும் ஞானசார தேரர் தப்பித்தது எப்படி? உதவியது யார்?


கடந்த பல நாட்களாக பொலிஸாருக்கு பெரும் தலையிடியாக இருந்த பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் ஞானசார இன்று நீதிமன்றில் சரணடைந்தார்.

நீதிமன்றில் ஆஜராகிய போதும் ஞானசார தேரரை பிணையில் விடுவிப்பதாக கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டார்.

தனது வழக்கறிஞர்கள் ஊடாக இன்றைய தினம் ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே இவ்வாறு விடுவிக்கப்பட்டார்.

நீதிமன்றத்தின் விசாரிக்கப்பட்டு வருகின்ற வழக்குகள் இரண்டின் சந்தேக நபரான ஞானசார தேரர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் இரண்டு முறை பிடியாணை பிறபிக்கப்பட்டது.

இவ்வாறு நீதிமன்றத்தை தவிர்த்த நபர் ஒருவர் எவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட முடியும் என சட்டத்தரணிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

ஞானசார தேரர் மறைந்திருந்த போது அவரை பாதுகாப்பதாக பல்வேறு தரப்பினர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பாக பிரபல அமைச்சர்கள் சிலரின் மீது விரல் நீட்டப்பட்டது.

அதற்கமைய அவ்வாறான அமைச்சர்களின் அழுத்தங்களுக்கு மத்தியில் ஞானசார தேரருக்கு பிணை வழங்கப்பட்டதாக சந்தேகம் எழுந்துள்ளது.

இதற்கு மேலதிகமாக இரண்டு முறை பிடியாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் அவரை பொலிஸார் கைது செய்யவில்லை.

அரசாங்கத்தின் பிரபல அமைச்சரின் பாதுகாப்பின் கீழ் ஞானசார தேரர் உள்ளமையினால் அவரை கைது செய்ய முடியவில்லை என அரசாங்கத்தின் பிரபல அமைச்சரிடம் பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

Comments