நட்சத்திர ஹோட்டலில் மஹிந்தவின் நெருங்கிய சகாவின் நடவடிக்கை
சமகால அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதிநிதி இரகசிய சந்திப்பு நடத்தியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த இரகசிய சந்திப்பு அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் மஹிந்தவுக்கு நெருக்கமான விசுவாசிகள் பலர் கலந்து கொண்டனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் நெருக்கமாக செயற்படும் அமைச்சர் ஒருவரும் கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளார்.
அந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட அதிகாரி, மஹிந்த அரசாங்கத்தின் பிரபல விடயங்களை கையாண்டதுடன். பல நிறுவனங்களில் முக்கிய பதவியில் செயற்பட்ட ஒருவராகும்.
இந்த கலந்துரையாடலின் இணைப்பு நடவடிக்கையினை பிரதமர் மற்றும் மஹிந்த ராஜபக்சவுக்கு நெருக்கமான ஒருவரே மேற்கொண்டுள்ளார். அவர் சுற்றுலா துறையுடன் தொடர்புடையவர் என கூறப்படுகின்றது.
எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் இரகசிய செயற்பாடுகள் தொடர்பிலும் அதற்காக வழங்கப்படும் ஆதரவு தொடர்பிலும் விவாதிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கிடைக்கும் நன்மை தொடர்பில் இங்கு நீண்ட நேரம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.


Comments
Post a Comment