மூதூர், ஆலிம் நகரில் சிறுவன் ஒருவன்,  உழவு இயந்திரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளான்


மூதூர், ஆலிம் நகரில், இன்று காலை வீதியில் ஓடி விளையாடிக்கொண்டிருந்த  சிறுவன் ஒருவன்,  உழவு இயந்திரத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளான் என,  பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலிம் நகரைச்  சேர்ந்த அஷ்கர் அர்ஹம் (வயது 7) என்ற சிறுவனே, இவ்வாறு உயிரிழந்துள்ளான்.

இந்தச் சம்பவம் தொடர்பில், மூதூர் பொலிஸார், விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

Comments