மூதூர்-மல்லிகைத்தீவு துஸ்பிரயோக சந்தேக நபர்கள் ஆறு பேருக்கும் பிணை


மூதூர்-மல்லிகைத்தீவு துஸ்பிரயோக சந்தேக நபர்கள் ஆறு பேருக்கும் இன்று (12) மூதூர் நீதிமன்ற நீதவான் ஜ.எம்.றிஸ்வான் பிணையில் செல்ல உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 10000/- காசுப் பிணையும் 200000/- சரீரப் பிணையும் நியமிக்கப் பட்டுள்ளது.
மேலதிக விசாரணை 10.07.2017 ற்கு ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த 03ம் திகதி அதிகாலை திருகோணமலை பெரியகடை பள்ளி வாயல் தீ வைக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 22 வயது இளைஞனை ஒரு இலச்சம் ரூபாய் சரீர பிணையில் செல்லுமாறு இன்று (12) திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் எம்.எச்.எம்.ஹம்ஸா இன்று திங்கள்கிழமை உத்தரவிட்டார்.

அத்துடன் எதிர்வரும் 07ம்மாதம் 10 திகதி வழக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

Comments