பொலிஸ் வாகனம் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டனரா?


பொலிஸாருக்கு சொந்தமான வாகனத்தின் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் மேற்கொண்டமைக்கான சாட்சியங்கள் இல்லையென பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அண்மையில் கிளிநொச்சி பளை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் வாகனத்தை மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த தாக்குதல் விடுதலைப் புலி உறுப்பினர்கள் மேற்கொள்ளப்பட்டதாக முன்னர் குற்றம் சாட்டப்பட்டது.

எனினும் இந்த தாக்குதல் விடுதலை புலி உறுப்பினர்களால் மேற்கொள்ளப்பட்டமைக்கான எவ்வித சாட்சியும் இல்லை என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

விடுதலை புலிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகம் என்ற தீர்மானத்திற்கு இதுவரையிலும் தாம் வரவில்லை. இது வேறு சில குழுக்களினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments