வில்லனை நடிகனாக்கி இறுதியில் முடிவடைந்த ஞானதார காவியம்


நல்லாட்சி அரசாங்கத்தின் தோல்வியும் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும் ஞானதார தேரவின் சரணடைவின் மூலம் வெளிச்சமானது.இலங்கையின் மதச்சுதந்திரம்,ஐனநாயகம் ,நீதித்துறை மற்றும் சட்ட ஆட்சியை கேலிக்கூத்தாக்கி தற்காலிகமாக முடிவடைந்த நாடகம்.இதன்மூலம் நாட்டின் ஐனநாயகம் சந்தர்ப்பவாதிகளுக்கும் சட்டம் சமூகவிரோதிகளுக்கும் சார்பாக விரல்நீட்டியுள்ளது.

மஹிந்த அரசை எடுத்ததெற்கு எல்லாம் விமர்சித்து பசுத்தோல் அணிந்து ஆட்சிபுரியும் மைதிரி அரசு தனது சுயரூபத்தை இரண்டுவருடத்திற்குள் காட்டியுள்ளது.

பல்வேறு வழக்குகள் நிலுவையிலும்,இரண்டு பிடிவிறாந்து நடமுறையிலும் உள்ள ஞானதார தேரர் ஜனநாயவாதியாகவும் குற்றமற்ற நபராகவும் சாயம்பூசப்பட்டுள்ளார்.இலங்கையின் நீதித்துறை தனக்குத்தானே செருப்பால் அடித்து சாதனை புரிந்துள்ளது.

ஒருபுறம் இந்தியாவின் செல்லப்பிள்ளையாகவும்,மறுபுறம் சிங்களமக்கள் வாக்குகளுக்காக கதாநாயகனாகவும் நடித்து ஞானதாரவை வில்லனாக வைத்து உருவான திரைப்படத்தை நீண்டகாலம் திறையிட முடியவில்லை.நல்லாட்சி உருவாக்கிய இந்த திரைப்படம் வில்லனான ஞானதாரவை கதாநாயகனாக்கி இடைநடுவில் முடிவடைந்துள்ளது.
இதற்கு முக்கிய 3 காரணங்கள் நியாயத்துடனும் வெளிப்படைத் தன்மையாகவும் பின்புலத்தில் அரங்கேறியது.

1-இந்தியாவின் அழுத்தம்
2-முஸ்லீம் நாடுகளின் அழுத்தம்
3}மாகாணசபைத் தேர்தலுக்கான அழுத்தம்
1-இந்தியாவின் அழுத்தம்
———————————-
இந்த ஞானதாரவை முழுமையாக இயக்கும் சக்தியாக இந்திய அரசுசார்பு சிவசேன மற்றும் ஜிந்துபர்ஷத் அமைப்புகள் உள்ளது.இவர்கள் அகில இலங்கை இந்துமாமன்றம் மற்றும் BBS அமைப்புடன் இலங்கையில் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்தியுள்ளனர்.குறிப்பாக இலங்கை முஸ்லீம்களுக்கு எதிராக ஹலால் முதல்ஆரம்பித்து ஆடை விடயம்,வியாபாரத்தை அழித்தல்,வடமாகாண முஸ்லீம்கள் குடியேற்றம்,பள்ளிவாசல் தாக்குதல் என்று தொடர்ச்சியாக முஸ்லீம்களை குறிவைத்துள்ளனர்.

தலதாமாளிகை தாக்குதல் உற்பட பல சிங்கள பொதுமக்கள்,இராணுவம் மற்றும் அரசியல்வாதிகளை கொலைசெய்த விடுதலைப் புலிகளைப் போன்று முஸ்லீம்கள் ஒருபோதும் நாட்டுக்கும் பௌத்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல.ஆனால் இந்துசார் அமைப்புகளுடன் சிங்கள தீவிரவாத ஞானதாரவின் கூட்டு முஸ்லீம்களை குஜராத்,காஸ்மீர் மற்றும் உத்தரப் பிரதேசங்களைப் போன்று அழிப்பதை மட்டுமே நோக்காக கொண்டது.கடந்த பலவாரங்களாக தலமறைவாக இருந்த ஞானதாரவை காப்பாற்றுவதற்கு இந்திய அரசும் அதன் இனவாத கும்பல்களும் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்தது.

விசேடமாக மேடியின் தலமையில் குஜராத்தில் முஸ்லீம்களை அழித்த Hindu Makasabha என்ற அமைப்பு 20/06/2017 பகிரங்கமாக ஐனாதிபதி மற்றும் பிரதமருக்கு இலங்கையில் உள்ள இந்டிய தூதுவராலயம் மூலம் கடிதம் அனுப்பியது.

இதனை வேறுவழியின்றி ஏற்றுக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கைக்கு உண்டானது.குறிப்பாகஅண்மையில் அரசாங்கத்தால் புரியப்பட்ட சில ஒப்பந்தங்களை வைத்து இந்திய அரசு அச்சுறுத்தியது.

2-முஸ்லீம் நாடுகளின் அழுத்தம்
———————————–
கடந்த19 &20 ஜூன் மாதம் முஸ்லீம் நாடுகளின் விசேட அபிவிருத்தி மகாநாடு சவுதியில் நடைபெற்றது.இதில் இலங்கை சார்பாககலந்து கொண்ட முஸ்லீம் பிரதிஅமைச்சரால் இலங்கை முஸ்லீம்கள் மீதான அடக்குமுறை பற்றி விரிவாக விளக்கப்பட்டது.இதன் விளைவாக பல முஸ்லீம் நாடுகளின் தலைவர்கள் இலங்கையில்உள்ள தூதுவராலயங்கள் மூலம் ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் விளக்கம் கேட்டனர்.அத்துடன் ஐனாதிபதியால் நடத்தப்பட்ட இப்தார் நிகழ்ச்சிக்குப் பின்னர் சிலமுஸ்லீம் இராஜதந்திரிகள் சந்திக்க முயற்சித்தனர்.

3-மாகாணசபைத் தேர்தல்
———————————
தற்போதைய உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்களை எதிர்வரும் ஜூலை மாதத்தின் பின்னர் நடத்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் அரசாங்கம் தளளப்பட்டுள்ளது.தேர்தல்ஆணையாளர் மற்றும் கூட்டு எதிர்க்கட்சிகளின் கெடுபிடி அதிகரித்துள்ளது.புலனாய்வு அறிக்கையின்படி மேல் மற்றும் மத்திய மாகாணம் தவிர்ந்த ஏனைய(வடகிழக்கு அல்லாமல்) மாகாணங்களில் மஹிந்தஅணி பலமாக உள்ளது.

இந்தநிலையில் கடந்த காலங்களில் முஸ்லீம்கள் வாக்குகளே மஹிந்த கொம்பனியை நடுரோட்டில் விட்டது.இந்த நிலைதமக்கு ஏற்படும் என்ற அச்சம் நல்லாட்சிக்கு குரல்வலயை நசுக்கத் தொடங்கியது.

ஆகவே இவற்றை ஓரளவேனும் சமாளித்துக் கொள்ள ஞானதாரவை வெளியே கொண்டுவரவும்,அவரை பாதுகாக்கவும் அரசாங்கத்துக்கு தேவை உண்டானது.
இந்த நிலையில் தான் பலசுற்றுப் பேச்சுக்களை அரசு ஞானதாரவுடன் மேற்கொண்டது.இதற்கு இந்தியசார் அமைப்பு நடுநிலையாக இருந்தது.

இதன்போது எட்டப்பட்ட முடிவின்பிரகாரமே திடீரென்று ஞானதார தேரர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.நான்கு பொலிஸ் விசேடபிரிவை அமைத்தும் கண்டுபிடிக்க முடியாத குற்றவாளி இராஜகிரியவில் இருந்து பாதுகாப்புடன் ஆஜரானார்.இவருக்கான பிணை உடனடியாக வழங்கப்பட்டது.சட்டத்தை மீறி நீதித்துறையை அவமதித்து,மற்ற மதங்களை நிந்தித்த ஒரு கொடூரமான குற்றவாளி 10 ரூபாய் திருடியவன் போல இராஜமரியாதையுடன் கௌரவிக்கப்பட்டான்.

இந்த கேவலமான செயற்பாட்டுக்கு பௌத்த
அஸ்கிரிய தலைவர்களும் சாதகமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.இது இலங்கை முஸ்லீம்களுக்கு விடுக்கப்பட்டுள்ள பாரியசவாலாகும்.

இதில் மிகவும்கேவலமான விடயம் எழும்புத் துண்டுகளுக்காக காத்திருக்கும் முஸ்லீம் தலைவர்களுக்கு ஐனாதிபதி இப்தார் வழங்கி தன்னை நியாயவாதியாக சித்தரித்து.

இதற்கான விலையை நல்லாட்சி கொடுத்தே ஆகவேண்டும்.முஸ்லீம்கள் இதற்கான பதிலை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை எமது சகோதரத்துவத்துக்கான அமைப்பு நிச்சயம் முன்னெடுக்கும்.

இன்னும் பலநூறு ஞானதேரர்களும் உருவாகலாம்.ஆனால் எமது சமூகத்தின் தலமைத்துவத்தை சரியாக வழிநடாத்தக்கூடிய கட்டமைப்பை உருவாக்கவேண்டும்.

இதன்மூலமே எதிர்கால சவால்களை முறையடிக்கலாம்.வெறுமனே பதவிக்கு விலைபோகும் முஸ்லீம் தலைவர்களால் நமது இருப்பும்,மதச்சுதந்திரமும் பாதுகாக்கப்படமாட்டாது.

ஆதலால் எமது திருகோணமலை சகோதரத்துவ அமைப்பின் செயற்பாடுகளுடன் இணைந்திருங்கள்.மாவட்டம் தாண்டிய முழுஇலங்கைக்குமான குரலாகவும் உயிர்நாடியாகவும் செயற்படுவோம்.
வெறுமனே உணர்ச்சிகளுக்கு அடிமையான சமூகமாக இருக்காமல்,இராஜதந்திர நகர்வுகள் மற்றும் நிதானமான காய்நகரத்தலுடன் எமக்கு முன்னால் உள்ள சவால்களையும் எதிரிகளயும் தோற்கடிப்போம்.

ஒற்றுமையே எங்கள் மார்க்கம்
சகோதரத்துவமே எங்கள் பாதை

Fahmy Mohamed
UK

Comments