இப்தார் நிகழ்வில் பிரதமருக்கு விசேட துஆப் பிரார்த்தனை
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கொழும்பு சாஹிராக் கல்லூரியின் 2001ஆம் வருட மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட புனித ரமழான்மாத நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு அண்மையில் மருதானை ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது.
இந்த வைபவத்தில் விசேட அதிதியாகக் கலந்து கொண்ட எம். தாஸின் மௌலவியால் புனித நோன்பின் மகத்துவம் பற்றி விரிவான சொற்பொழிவு இடம்பெற்றது.
பிரதமர் ரணில் விக்கரமசிங்க கூடிய விரைவில் சுகமடைந்து நாட்டுக்காவும் நாட்டு மக்களுக்காகவும் தொடர்ந்து பணிபுரிய அல்லாஹ்வின் அருள்கிடைக்கவும் மற்றும் நாட்டிற்காகவும், நாட்டுமக்கள் அனைவரும் சௌபாக்கியத்துடனும் வாழவும், விசேடமாக சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டு அகதிமுகாம்களில் உள்ளவர்களுக்காகவும் அத்தோடு, நிகழ்வை ஏற்பாடு செய்த பழைய மாணவர்கள் அனைவருக்கும் ஈருலக நற்பேற்றினையடையவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.
நிகழ்வில், 2001 பழைய மாணவர்கள், பிரதேச வாசிகள், ஜமாஅத்தினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Comments
Post a Comment