மஹிந்தவுக்கெதிராக ஒழுக்காற்று விசாரணை: சு.க
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையையும் கட்சி முடிவுகளையும் தீவிரமாக விமர்சித்து வரும் மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது அணியில் இயங்கும் 15 சு.க உறுப்பினர்களிடம் இரு வாரங்களுக்குள் ஒழுக்காற்று விசாரணை நடாத்தப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
மைத்ரி தலைமையிலான பலவீனமான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிர்வாகம் இதற்கு முன்னரும் பல தடவைகள் இவ்வாறு தெரிவித்த போதிலும் இறுதியில் கட்சி முடிவுகளுக்கு முரணாக நடந்து கொண்ட மஹிந்த அணியினர் ஒரு போதும் விசாரணைக்குட்படுத்தப்பட வில்லை.
எனினும், இம்முறை தாம் விசாரணை நடாத்தவுள்ளதாக கட்சியின் செயலாளர் துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment