லக்ஷ்மன் யாப்பாவின் மகனுக்கு பிடியாணை
இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பாவின் மகன் ஒசந்த யாப்பா அபேவர்தனவுக்கு பிடியாணை பிறப்பித்து கொழும்பு போக்குவரத்து நீதிமன்றம், இன்று உத்தரவிட்டுள்ளது.
வாகன விபத்து தொடர்பில் 6 குற்றங்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமை காரணமாக கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தின் நீதவான் சந்தன கலங்கசூரிய, ஒசந்த யாப்பா அபேவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு எதிர்வரும் ஓக்டோபர் மாதம் 3 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment