உள்நாட்டு அரிசி தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை
உள்நாட்டு அரிசி தேவையை பூர்த்தி செய்வதற்காக 6 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.
அபிவிருத்தி மூலாபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.
வறட்சியான காலநிலையால் பல்வேறு மாவட்டங்களில் நெல் உற்பத்தி வெகுவாக பாதிப்படைந்துள்ளது.
இந்நிலையில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment