அரசாங்கத்துக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் அரசாங்க வைத்தியர்கள்
சில வைத்தியசாலைகளை தவிர நாடு முழுவதும் உள்ள ஏனைய அனைத்து அரசாங்க வைத்தியசாலைகளின் வைத்தியர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.
அரசாங்க வைத்தியசாலைக்கு செல்வதா இல்லையா என்பது தொடர்பில் நோய் வாய்ப்பட்டுள்ள மக்களே தீர்மானிக்க வேண்டும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் நலிந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தங்கள் பணி பகிஷ்கரிப்பை நேற்று காலை 8 மணியளவில் ஆரம்பித்தது.
சைட்டம் நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு வெளியிட்டமையே போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
குழந்தைகள் வைத்தியசாலை, மகப்பேறு வைத்தியசாலைகள் மற்றும் புற்றுநோய் நிறுவனங்களின் இன்று வைத்திய பணி பகிஷ்கரிப்பு இடம்பெறாது. ஏனைய வைத்தியசாலைகளில் டெங்கு மற்றும் அவசர வைத்திய பிரிவுகளில் தடையின்றி சேவைகள் வழங்கப்படுகின்றதென வைத்திய சங்கம் தெரிவித்துள்ளது.
எப்படியிருப்பினும் தங்கள் பணி பகிஷ்கரிப்பு தோல்வி என அரசாங்கம் கூறினால் அந்த சிகிச்சைகளும் நிறுத்தப்படும் என அரசாங்க வைத்திய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


Comments
Post a Comment