சவுதி: நிறைவை எட்டும் இலங்கையருக்கான பொது மன்னிப்பு காலம்


சவுதி அரேபியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையருக்கான பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் ஜுன் 25ம் திகதியுடன் நிறைவுறும் நிலையில் அவ்வாறானவர்களை விரைவில் நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை விடுத்துள்ளது வெளியுறவுத்துறை அமைச்சு.

கால எல்லையை மீறியும் தங்கியிருப்போர் கைது செய்து நாட்டுக்குத் திருப்பியனுப்பப்படுவதோடு அவர்கள் மீண்டும் சவுதி அரேபியா வர முடியாத நிலை ஏற்படும் என சவுதி அரசும் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments