றவூப் ஹக்கீம் தலைமையில் நடமாடும் சேவை!
தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைப்புச் சபையின் அனுசரணையுடன் திருகோணமலை மாவட்டத்திற்கு உட்பட்ட குடிநீர் பிரச்சினைகளை ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக நடமாடும் சேவை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் சேவை நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீம் தலைமையில் 2017. ஜூலை 15 ஆம் திகதி காலை 9.00 மணிக்கு திருகோணமலை கண்டி வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண பிரதி பொது முகாமையாளர் காரியாலயத்தில் நடைபெறவுள்ளது.
குடிநீர் சம்மந்தமான ஏதாவது பிரச்சினைகள் இருப்பின் அது தொடர்பான பொது மக்களது எழுத்து மூல முறைப்பாடுகளை பிரதேச பொறியியலாளர் காரியாலயத்தில் 2017.06.29 திகதிக்கு முன்னர் கிடைக்குமாறு நேரடியாகவோ அல்லது தபால் மூலமோ அல்லது தொலைநகல் (0262225 383) ஊடாக அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு முறைப்பாடுகளைச் செய்பவர்களுக்கு இலக்க அட்டை ஒன்று வழங்கப்படும். அவற்றை நடமாடும் சேவை நடக்கும் தினத்தில் கொண்டு உரிய தீர் வினைப் பெற்றுக் கொள்ளலாம் எனநீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை கேட்டுக் கொண்டுள்ளது.


Comments
Post a Comment